search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்வர் ராஜா எம்பி"

    திருப்புல்லாணி ஒன்றியம் தினைக்குளம் ஊராட்சி தத்தெடுக்கப்பட்டு ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது அன்வர் ராஜா எம்.பி. தெரிவித்துள்ளார்.
    கீழக்கரை:

    மத்திய அரசின் சன்சத் ஆதார் கிராம யோஜனா திட்டத்தில் கீழ் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டம் தினைக்குளம் ஊராட்சியில் ராமநாதபுரம் எம்.பி. அன்வர் ராஜா தலைமையில் நடந்தது.

    திட்ட பொறுப்பு அலுவலர் வீரப்பன் முன்னிலை வகித்தார். தினைக்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் முனியாண்டி, ஒன்றிய ஆணையாளர் ரோஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜூ, ஜமாத் தலைவர் முகம்மது அலி ஜின்னா,செயலாளர் முகம்மது ரபீக், ஒன்றிய அலுவலக மேலாளர் மலையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தினைக்குளம் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்.பொது மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அன்வர் ராஜா எம்.பி உறுதியளித்தார்.பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.

    விழாவில் எம்.பி. அன்வர் ராஜா பேசியதாவது:-

    சன்சத் ஆதார் கிராம யோஜனா திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கி இருக்கும் திருப்புல்லாணி ஒன்றியம் தினைக்குளம் ஊராட்சி தத்தெடுக்கப்பட்டு ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    பல கிராமங்களுக்கு தாய் கிராமமாக உள்ளதால்இந்த ஊராட்சியை தத்தெடுக்க முடிவு செய்தோம். இதையடுத்து 11 குடிநீர் பணிகள், 9 கட்டிட பணிகள், 16 சாலை பணிகளுக்காகவும் ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. ஆகவே எல்லா பணிகளும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். தினைக்குளத்தில் தேசியமாக்கப்பட்ட வங்கி ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×